தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பெண் யார் தெரியுமா?
தோனியின் ரூ.800 கோடி மதிப்புள்ள தயாரிப்பு நிறுவனத்தை பெண் ஒருவர் நிர்வகித்து வருகிறார்.
மகேந்திர சிங் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமாக அணித்தலைவராக கருதப்படுபவர் மகேந்திர சிங் தோனி.
44 வயதான அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது வரை ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வருகிறார்.
கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு தொழில்களில் தோனி முதலீடு செய்துள்ள நிலையில், அவரின் சொத்துமதிப்பு ரூ.1,030 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனம்
இதில், பெரும்பகுதி வருமானம் அவருக்கு சொந்தமான Dhoni Entertainment என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை, அவரது மனைவி சாக்ஷி தோனி வைத்துள்ளார்.
மேலும், சாக்ஷி தோனியின் தாய் செய்லா சிங் (sheila singh) இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இவரது தலைமையின் கீழ் வளர்ச்சியடைந்து தற்போது ரூ.800 கோடி மதிப்பு மிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த நிறுவனம் தமிழில் கூட 2023 ஆம் ஆண்டு LCM என்ற திரைப்படத்தை தயாரித்தது.
முன்னதாக செய்லா சிங், தனது கணவர் ஆர்.கே.சிங் வேலைக்கு சென்றதும் வீட்டு வேலைகளை நிர்வகித்து வந்தார்.
தோனியின் தந்தை பேன் சிங் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்த கானோய் நிறுவனத்தின் Binaguri தேயிலை எஸ்டேட்டில் தான் சாக்ஷி தோனியின் தந்தை ஆர்.கே.சிங்கும் பணியாற்றி வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |