புடினை சந்திக்க போராடும் ஜெலென்ஸ்கி! கைவிரித்த டிரம்ப்: ரஷ்யா சொல்வது என்ன?
புடினை நேரில் சந்திக்கும் தன்னுடைய முயற்சிகள் தடுக்கப்படுவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
புடினுடனான சந்திப்பை ரஷ்யா தடுக்கிறது
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான சூழல் மீண்டும் மோசமடைந்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து 3 மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் இந்த சந்திப்பில் இறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே சந்திப்பை ஏற்படுத்த டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்தார்.
இறுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் வழங்கிய தகவலில், ஜெலென்ஸ்கியும், புடினும் “எண்ணெயும், தண்ணீரும்” போல் உள்ளனர், அவர்கள் அவ்வளவு எளிதாக இணைந்து செயல்பட மாட்டார்கள்” என குறிப்பிட்டு தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தன்னுடைய முயற்சிகளை ரஷ்யா தொடர்ந்து தடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
'Zelensky said No to Everything'
— Chay Bowes (@BowesChay) August 22, 2025
Lavrov stresses Zelensky rejected all president Trump's principles for peace
'How can we meet with a person pretending to be a leader?' pic.twitter.com/3WmKW7z1FQ
சரியான திட்டம் இருந்தால் புடின் தயார்!
அமெரிக்க ஜனாதிபதியின் கருத்துக்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், அமைதி பேச்சுவார்த்தைக்கான சரியான நிகழ்ச்சி நிரல் உருவானால் மட்டுமே புடின் மாநாட்டிற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |