அறுவை சிகிச்சையின் தந்தைக்கு பிரித்தானியாவில் கௌரவம்: யார் இந்த சுஷ்ருதர்?

United Kingdom
By Balamanuvelan Jun 24, 2026 11:51 AM GMT
Report

அறுவை சிகிச்சையின் தந்தை என்று கருதப்படும் சுஷ்ருத மகரிஷியை கௌரவிக்கும் வகையில், ஸ்கொட்லாந்தின் ராயல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சுஷ்ருதர்?

சுஷ்ருத மகரிஷி அல்லது ஆச்சார்யா சுஷ்ருதர் என அழைக்கப்படும் சுஷ்ருதர், இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள கன்யாகுப்ஜா என்னும் இடத்தில் பிறந்தவர். 

அறுவை சிகிச்சையின் தந்தைக்கு பிரித்தானியாவில் கௌரவம்: யார் இந்த சுஷ்ருதர்? | Who Is Sushrutha Honour At Oldest Surgical College

கன்யாகுப்ஜா இன்று கண்ணோஜ் என அழைக்கப்படுகிறது.

தன் வாழ்நாள் முழுவதையும் மருத்துவத்துக்காக செலவிட்ட சுஷ்ருதர், 2,600 ஆண்டுகளுக்கு முன் 1,120 நோய்கள், 700க்கும் அதிகமான மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள், 300 மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் 120 அறுவை சிகிச்சை கருவிகள் குறித்து தனது புத்தகமான Sushrutha Samhita என்னும் புத்தகத்தில் எழுதி வைத்துச் சென்றுள்ளார். 

அறுவை சிகிச்சையின் தந்தைக்கு பிரித்தானியாவில் கௌரவம்: யார் இந்த சுஷ்ருதர்? | Who Is Sushrutha Honour At Oldest Surgical College

அந்த புத்தகத்தில், அறுவை சிகிச்சை, மருந்துகள் மூலம் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், நச்சியல், மனோவியல், கண், காது, மூக்கு மற்றும் தொண்டைக்கான சிகிச்சை, முதியோர் நலன் ஆகிய பல்வேறு மருத்துவத் துறைகள் குறித்து எழுதிவைத்துள்ளார் அவர். 

16 வயதில் ரூ.100 கோடி நிறுவனம் - சாதித்த இந்தியாவின் பிராஞ்சலி அவஸ்தி

16 வயதில் ரூ.100 கோடி நிறுவனம் - சாதித்த இந்தியாவின் பிராஞ்சலி அவஸ்தி

இந்த காலத்தைப்போல எந்த நவீன கருவிகளும் இல்லாத நிலையிலும், அறுவை சிகிச்சை மட்டுமின்றி, மூக்கு முதலான உறுப்புகள், தீயால் பாதிக்கப்பட்ட உடல் பாகங்களை மறுசீரமைக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் சிகிச்சையிலும் சிறந்து விளங்கிய சுஷ்ருதர், 'அறுவை சிகிச்சையின் தந்தை' என்று மட்டுமல்ல, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தை (father of plastic surgery) என்றும் அழைக்கப்படுகிறார். 

இந்நிலையில், அறுவை சிகிச்சைத் துறைக்கு அவர் ஆற்றிய முன்னோடிப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய மருத்துவரான ஆச்சார்ய சுஷ்ருதரின் 90 கிலோகிராம் எடையுள்ள வெண்கலச் சிலை ஒன்று எடின்பர்க் ராயல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளுக்கு முன்பே, அவுஸ்திரேலியாவின் மெல்போர்னிலுள்ள ராயல் ஆஸ்ட்ரேலியன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் சுஷ்ருதருடைய பளிங்குச் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

அந்த சிலை, பிரபல இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணரான Dr KM செரியன் அவர்களால் பரிசளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US