UPSC தேர்வில் முதலிடம் பிடித்த கேரளாவைச் சேர்ந்த முதல் பெண்மணி யார் தெரியுமா?
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்த கேரள பெண் IAS அதிகாரியை பற்றி பார்க்கலாம்.
யார் அவர்?
கேரளாவின் நெய்யாட்டின்கரா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர் ஹரிதா வி குமார். இவர் நவம்பர் 21, 1985 அன்று ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தந்தை விஜய குமார், கேரள நீர் ஆணையத்தில் ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார், அவரது தாயார் சித்ரா ஒரு இல்லத்தரசி. ஹரிதாவுக்கு சத்ரர்ஷ் மற்றும் சதீர்த் என்ற இரட்டை சகோதரர்களும் உள்ளனர்.
இவர் தனது உயர்நிலைக் கல்வியை செயிண்ட் தெரசா கான்வென்ட்டிலும், நெய்யாட்டின்கராவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியிலும் முடித்தார். பின்னர், மேலதிக படிப்புகளுக்காக திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார்.
பார்டன் ஹில் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புகளில் பி.டெக் பட்டம் பெற்றார். தனது ஐஏஎஸ் கனவைத் தொடர HCL டெக்னாலஜிஸின் வேலை வாய்ப்பை அவர் நிராகரித்தார்.
இவர் 2009 ஆம் ஆண்டு தனது முதல் UPSC முயற்சியை மேற்கொண்டார். அப்போது முதல்நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மெயின் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
பின்னர் மீண்டும் முயற்சி செய்து, சிறந்த ரேங்க் (179) பெற்றார். இது அவரை IPS மற்றும் IRS தேர்வுக்கு தகுதி பெறச் செய்தது. அவர் IRS தேர்வு செய்தார். ஆனால் சிறந்த ரேங்கிற்கு தொடர்ந்து பாடுபட்டார்.
மூன்றாவது முயற்சிக்குப் பிறகு (ரேங்க் 294), ஹரிதா கைவிட நினைத்தார். ஆனால் அவரது பெற்றோரின் உந்துதலும் ஆதரவும் அவரை விடாமுயற்சியுடன் இருக்க வைத்தது.
இறுதியாக, நான்காவது முயற்சியில் முதல் ரேங்குடன் IAS தேர்வில் தேர்ச்சி பெற்று. அப்போது அவருக்கு வயது 27. அவர் தற்போது கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பொறுப்பாளராக உள்ளார்.
இவரது கல்வி சாதனைகளைத் தவிர, இவர் ஒரு திறமையான கலைஞர். கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றவர். பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்வுகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில், ஹரிதா ரூபேஷ் இயக்கிய மலையாள திரைப்படமான கருணாவில் பாடகியாக அறிமுகமானார். ஹிந்துஸ்தானி ராகமான ஷ்யாம் கல்யாணில் மோகன் சித்தாரா இசையமைத்த பாடலுக்கு அவர் குரல் கொடுத்தார். இது திருச்சூரில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |