ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்?: புடின் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை துவங்கிய மூத்த ரஷ்ய அதிகாரிகள்

Vladimir Putin Russian Federation
By Balamanuvelan May 25, 2022 05:35 AM GMT
Report

ரஷ்யாவில், புடினுடைய இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்த தீவிர விவாதங்கள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடின் இல்லாத ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை, ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் தீட்டி வருவதாக கூறப்படுகிறது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் துவங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கிரெம்ளின் அதிகாரிகள், மற்றும் ரஷ்ய செல்வந்தர்களில் ஒருவருக்குக் கூட புடின் மீது திருப்தி இல்லை என ரஷ்ய அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் Meduza என்னும் ஊடக இணையதளத்திடம் தெரிவித்தார்.

போர் துவக்கினால் தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து கொஞ்சம் கூட யோசிக்காமல் புடின் உக்ரைனை ஊடுருவியதில், ரஷ்ய தொழிலதிபர்களுக்கோ அரசில் பொறுப்பு வகிப்பவர்களுக்கோ, யாருக்கும் விருப்பமில்லை என அந்த நபர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்?: புடின் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை துவங்கிய மூத்த ரஷ்ய அதிகாரிகள் | Who Is The Next President Of Russia

தடைகளுடன் வாழ்க்கை நடத்துவது சாத்தியமே இல்லை என அந்த அரசு அலுவலர் குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது கருத்தை மேலும் இரண்டு அரசு அலுவலர்கள் ஆமோதித்துள்ளார்கள்.

போரால் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இப்போதே கண்கூடாகத் தெரிவதாக கூறும் அந்த அலுவலர், கோடையின் மையத்தில், மேலும் பல திசைகளிலிருந்து பிரச்சினைகள் வரும் என்கிறார். அதாவது, போக்குவரத்து, மருந்துகள், ஏன் விவசாயத்துக்குக் கூட பிரச்சினை ஏற்படும் என்கிறார். இந்த அளவுக்கு பிரச்சினைகள் மோசமாகும் என யாரும் நினைக்கவில்லை என்கிறார், ரஷ்ய அரசுக்கு நெருக்கமான அந்த அலுவலர்.

ஆக, உக்ரைன் போர் விடயத்தில் புடின் சொதப்பி விட்டார் என ரஷ்ய உளவுத்துறையினர் நினைக்கிறார்கள், தொழிலதிபர்களும், ரஷ்ய செல்வந்தர்களும் தடைகள் குறித்து வருத்தமடைந்துள்ளார்கள், அதிகாரிகளுக்கு புடின் மீது திருப்தியில்லை.

ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்?: புடின் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை துவங்கிய மூத்த ரஷ்ய அதிகாரிகள் | Who Is The Next President Of Russia

எனவே, புடினுக்கு பதிலாக ரஷ்யாவை வழிநடத்தப்போவது யார் என்பது குறித்து மூத்த ரஷ்ய அதிகாரிகள் விவாதிக்கத் துவங்கிவிட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், புடினைக் கொல்ல முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து தப்பிய அவர் தன்னுடைய அதிகாரிகள் மீது நம்பிக்கையிழந்துள்ளதால், அவர்கள் தன்னைக் கொல்ல முயற்சிக்கக்கூடும் என அஞ்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் ஒருபடி மேலே போய், ரஷ்ய வரலாற்றிலேயே முதல் முறையாக, உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா செய்வது சகித்துக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும், தன் நாட்டைக் குறித்து தன் அவமானமாக கருதுவதாகவும் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான ரஷ்ய தூதரக அலுவலரான Boris Bondarev (41) என்பவர் ராஜினாமா செய்துள்ள விடயம், உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

ரஷ்யாவின் அடுத்த ஜனாதிபதி யார்?: புடின் இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை துவங்கிய மூத்த ரஷ்ய அதிகாரிகள் | Who Is The Next President Of Russia

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US