ரூ. 860 கோடி சொத்து.., இந்தியாவின் பணக்கார நடிகை: யார் தெரியுமா?
தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகை என்ற அந்தஸ்தை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பெற்றுள்ளார்.
ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. இவர்1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர்.
இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வரும் இவர் மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இருவர் திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு ஹிந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் வரவேற்புகள் அதிகமாக இருந்தது.
இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இதற்காக அவர் சுமார் ரூ. 15 கோடி சம்பளம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஐஸ்வர்யா ராய் 2.0, ராவணன், குரு, ஜீன்ஸ், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் முக்கிய நடிகையாக இடம்பெற்று வரும் ஐஸ்வர்யா ராய் சுமார் ரூ.862 கோடி அளவுக்கு சொத்துக்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது மற்ற பல முன்னணி நடிகர்களின் சொத்து மதிப்பை விட அதிகமாகும்.
இதற்கு அடுத்த இடத்தில், சுமார் ரூ. 650 கோடி சொத்து மதிப்புடன் பிரியங்கா சோப்ராவும், இதற்கு அடுத்த இடத்தில் நடிகை ஆலியா பட்டும் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |