வேகப்புயல் பும்ராவை மணம் முடித்த சஞ்சனா கணேசன் யார்?

Wedding Cricketer Fast Bowler Jasprit Bumrah Sanjana Ganesh
By Balakumar Mar 15, 2021 04:34 PM GMT
Report

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. தன் டிவிட்டர் பக்கத்தில் பும்ரா இந்தத் தகவலை உறுதிப்படுத்த, புதிய தம்பதியை கிரிக்கெட் உலகம் வாழ்த்திக்கொண்டிருக்கிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் மற்றும் டி-20 தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக விடுப்பு கேட்டிருந்தார் பும்ரா. அப்போதிருந்தே பும்ராவுக்குக் கல்யாணம் என்றும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசன்தான் மணப்பென் என்றும் பரவலான பேச்சு அடிபடத் தொடங்கியது. பும்ராவைப் பாராட்டி சஞ்சனா போட்ட ட்வீட்களையெல்லாம் வைரலாக்கினார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இந்நிலையில் இன்று தங்கள் ட்வீட் மூலம் அந்தச் செய்தியை உண்மையாக்கியுள்ளது பும்ரா - சஞ்சனா தம்பதி.

"நீங்கள் தகுதியானவராக இருந்தால், காதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அன்பின் துணைகொண்டு இருவரும் இணைந்து புதியதோர் பயணத்தைத் தொடங்குகிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான தினங்களில் இதுவும் ஒன்று. எங்கள் திருமணச் செய்தியை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று இருவரும் தங்கள் டிவிட்டர் பக்கங்களில் தனித்தனியே பதிவிட்டிருக்கிறார்கள்.

ஜஸ்ப்ரித் பும்ரா, இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பந்துவீச்சாளர். தன் வித்யாசமான பந்துவீச்சு முறையாலும், துல்லியமான யார்க்கர்களாலும் பெயர் பெற்ற பும்ரா, இன்று உலக கிரிக்கெட் அரங்கின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக விளங்குகிறார்.

அஹமதாபாத்தில் பிறந்தவரான அவர், 2013 ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வயது 19. முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியவர், அடுத்தடுத்த சீசன்களில் அந்த அணியின் அசைக்க முடியாத சொத்தாக மாறினார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், 2016-ம் ஆண்டு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

அதன்பிறகு டி-20, ஒருநாள், டெஸ்ட் என ஒவ்வொரு ஃபார்மட்டிலும் தன்னை நிரூபித்து, இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஆளாகியிருக்கிறார் பும்ரா. இதுவரை 250 சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒருநாள் போட்டிக்கான சர்வதேச ஐ.சி.சி ரேங்கிங்கில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பும்ரா, டெஸ்ட் ரேங்கிங்கில் பத்தாவது இடத்திலும், டி-20 ரேங்கிங்கில் 18-வது இடத்திலும் இருக்கிறார்.

உலகின் மிரட்டலான பௌலர்களுள் ஒருவரான பும்ராவை மணந்திருக்கும் இந்த சஞ்சனா கணேசன் யார்?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் சஞ்சனா கணேசன். புனேவைச் சேர்ந்தவரான அவர், பொறியியல் பட்டதாரி. கல்லூரியிலிருந்து வெளியேறும்போதே கையில் 3 வேலைகள் பெற்றிருந்தவர், தங்க மெடலும் வாங்கியிருந்தார். செய்தித்தாளில் வந்த ஒரு 'ஃபெமினா' மாடலிங் விளம்பரம் பார்த்து அவரின் பெற்றோர்கள் அதை முயற்சி செய்யச் சொல்ல, தனக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத மாடலிங் துறையில் இறங்கினார் சஞ்சனா.

Femina Officially Gorgeous, ஃபெமினா மிஸ் இந்தியா புனே போன்ற மாடலிங் போட்டிகளில் பங்கேற்றவர், 2014-ம் ஆண்டு நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று, 24 பேர் கொண்ட இறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார். அதன்பிறகு தனியார் தொலைக்காட்சியான MTV நடத்தும் ஸ்ப்லிட்ஸ்விலா (Splitsvilla) ரியாலிட்டி ஷோவின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டார். ஒரு போட்டியின்போது ஏற்பட்ட காயத்தால், சில நாள்கள் கழித்து அவராகவே அந்தப் போட்டியிலிருந்து வெளியேறினார். அந்த சீசனில் 17-வது இடம் பெற்றார் சஞ்சனா கணேசன்.

இந்தப் போட்டியில் பங்கேற்றபோதுதான் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைந்தார் சஞ்சனா. அதைப் பார்த்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலுவலகத்திலிருந்து அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. தொகுப்பாளர் தேர்வுக்கு அவரை ஆடிஷன் செய்ய அழைத்திருக்கிறார்கள்.

"நான் விளையாட்டைப் பார்த்து வளர்ந்த ஆள் கிடையாது. விளையாட்டின் விதிகளைப் பற்றியோ, டாப் வீரர்களைப் பற்றியோ அப்போது நான் தெரிந்திருக்கவில்லை" என்று பின்னொரு நாளில் கூறியிருந்தார் சஞ்சனா. ஆனால், அந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்தபோது அவர் மறுக்கவில்லை. தயங்கி நிற்கவில்லை. அவர் திறனை அறிந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் அவரை தங்கள் தொகுப்பாளர்கள் குழுவில் இணைத்துக்கொண்டது.

2015 ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரிலிருந்து தன் விளையாட்டு தொகுப்பாளர் பயணத்தைத் தொடங்கினார் சஞ்சனா. அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த பல்வேறு முன்னணி தொடர்களிலும் தொகுப்பாளராகப் பங்கேற்று பிரபலமடைந்தார். இந்தியாவில் நடந்த 2016 டி-20 உலகக் கோப்பை, 2018 டி-20 உலகக் கோப்பை என மிகப்பெரிய தொடர்களில் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

2017-ம் ஆண்டு 'தி நைட் கிளப்' (The Knight Club) எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கத் தொடங்கினார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களோடு உரையாடும் நிகழ்ச்சியான அது, அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதிலும் குறிப்பாக கொல்கத்தா ரசிகர்களின் பிரியமான தொகுப்பாளர் ஆனார். கொல்கத்தாவும் அவருக்கு ஃபேவரட் அணியானது. அதனால், இப்போது பல ரசிகர்களும் "கொல்கத்தா ரசிகையான சஞ்சனா இனி எந்த அணியை ஆதரிப்பார்" என்று விளையாட்டாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்பிறகும் பல முன்னணி தொடர்களில் பணிபுரிந்தார் சஞ்சனா. குறிப்பாக, 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது அவர் தொகுத்து வழங்கிய 'மேட்ச் பாயின்ட்' உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் அவர் தொகுப்பாளராகப் பங்கேற்றார்.

சஞ்சனாவின் தந்தை கனேசன் ராமசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர். புனேவிலுள்ள அலானா மேலான்மை அறிவியல் நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். அம்மா சுஷ்மா கனேஷன் மராத்தி. அவர் வழக்கறிஞராக உள்ளார். சகோதரி ஷீதல், பல் மருத்துவர்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருவருமே பிரபலமானவர்கள் என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இருவரையும் வாழ்த்திக்கொண்டிருக்கிறது.

 BBC - Tamil  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US