சுமை தூக்கும் தொழிலாளியின் மகளாக பிறந்து பல்வேறு கஷ்டங்களை மீறி சாதித்த தமிழச்சி! யார் இந்த இந்துமதி?
தமிழக வீராங்கனையான இந்துமதி கதிரேசன் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி முதல் பிப்ரவரி 6 ஆம் திகதி வரை இந்தியாவில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது.
இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்திய அணி, ஏப்ரல் 5 ஆம் திகதி உஸ்பெகிஸ்தான் அணியுடனும் ஏப்ரல் 8 ஆம் திகதி, பெலாரஸ் அணியுடனும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கிறது.
இந்த இரு ஆட்டங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்துமதி சுமை தூக்கும் தொழிலாளி கதிரேசன் என்பவரின் மகள் ஆவார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக இந்துமதி விளையாடி வருகிறார். இதுவரை 34 போட்டியில், 12 கோல் அடித்துள்ளார்.
தமிழக காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்துமதி கதிரேசன் கூறுகையில், துருக்கியில் நாங்கள் மிகச்சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாடினோம்.
துருக்கியில் நடந்த ஆட்டங்களுக்கு சங்கீதா பஸ்தோர் கேப்டனாக இருந்தார்.
இந்த இரண்டு போட்டிகளுக்கு நான் கேப்டனாக இருக்கப் போவதை பெருமைமிக்க தருணமாக உணர்கிறேன் என கூறியுள்ளார்.
