உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா; 163 தளங்கள் - உரிமையாளர் யார் தெரியுமா?
உலகின் மிக உயரமான கட்டிடமாக புர்ஜ் கலிஃபா கட்டிடம் கருதப்படுகிறது.
புர்ஜ் கலிஃபா
இதன் மொத்த உயரம் 828 மீட்டர் (சுமார் 2,717 அடி). இது பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட மூன்று மடங்கு உயரமானது. இந்தக் கட்டிடம் 163 தளங்களைக் கொண்டுள்ளது.

துபாயின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகளாவிய சுற்றுலா மையமாக துபாய் உருவெடுப்பதற்கு ஒரு சின்னமாக மாறியுள்ளது. இதன் 76வது தளத்தில் நீச்சல் குளமும், 158வது தளத்தில் மசூதியும் உள்ளன.
இது ஒரு பெரிய ரியல் எஸ்டேட் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதி. எனவே, இது ஒருவருக்குச் சொந்தமானது அல்ல. அதன் உரிமை பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை உரிமையாளர் மற்றும் டெவலப்பர் நிறுவனம் எமார் பிராப்பர்டீஸ் (Emaar Properties).
உரிமையாளர் யார்
இதன் சொத்துக்களில் புர்ஜ் கலிஃபாவில் உள்ள பல குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்புகள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் மேல் தளங்களில் உள்ள பார்வையாளர் தளங்கள் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனத்தை நிறுவியவர் மற்றும் அதன் மிக முக்கியமான நபர் முகமது அலாபார்.

இவரே நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அபுதாபியைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ரியல் எஸ்டேட் தலைவர்களில் ஒருவராவார்.
மேலும் இந்த நிறுவனத்தில் துபாய் அரசு கணிசமான பங்குகளை வைத்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் அரசும் பங்கு வகிக்கும்.
2010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து உலகின் மிக உயரமான கட்டிடமாகத் தனது சாதனையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.