சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு? பெரும் எதிர்பார்ப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு ஆதரவு அளிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் முக்கிய அறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என டிசம்பர் 3ம் தேதி, ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த, டிசம்பர் 29ம் தேதி அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை விட்டு ரசிர்களை கலக்கத்தில் ஆழ்த்தினார்.
தனது இந்த முடிவிற்கு உடல்நிலையே காரணம் என குறிப்பிட்ட நடிகர் ரஜினி, என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியலில் இருந்து விலகியுள்ள நடிகர் ரஜினியின் யாருக்கு ஆதரவளிப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், இந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என அறிவித்துள்ளார்.
ரஜினி ஆதரவளிப்பார் என ஆவலுடன் இருந்த பல கட்சிகளுக்கு இந்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.