காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பு! இனியும் இதே நிலை தொடர்ந்தால்.. எச்சரிக்கும் WHO
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பேர் உயிரழந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த நவீன காலத்தில் காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்கள் பயங்கர பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. காற்று மாசுபாட்டை தடுக்க உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2005ஆம் ஆண்டில் இருந்தே காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நிலை பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் மக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு ஆண்டுக்கு காற்று மாசுபாட்டால் சுமார் 70 பேர் பலியாகி வருவதாக கூறப்படுகிறது. காற்றில் மாசு அடைவதால் இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த பாதிப்புகள், நீரிழிவு போன்ற நோய்களால் மக்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் 194 உறுப்பு நாடுகளுக்கு வழங்கிய வழிகாட்டுதல்படி காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பட் டை ஆக்சைடு உள்ளிட்ட நச்சுக்களை குறைத்துள்ளது.
எனவே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசுகள் மக்களுக்கு சரியான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்திட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.