உலகை மிரட்டும் கொரோனா வைரஸ்! அடுத்து என்ன நடக்கும்? எச்சரிக்கும் WHO
உலகை அச்சுறுத்தும் Omicron மாறுபாட்டில் இருந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவை தொடர்ந்து கொரோனா வைரஸின் மாறுபாடான Omicron தென் ஆப்பிரிக்காவில் தோன்றியது. இந்த தொற்று உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் Omicron வைரஸ் புதிய வைரசை உருவாக்கக்கூடும் என்று ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்வுட், தற்போது உலகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வரும் Omicron தொற்று விரைவில் அதிகரித்து பெரிய ஆபத்தினை உண்டாக்கும்.
இருப்பினும் அதன் பாதிப்பு தன்மை டெல்டாவை விட குறைவாகவே உள்ளது. ஆனால் Omicron வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் மேற்கு ஐரோப்பாவில் நோய்த்தொற்று விகிதங்களில் அதிகரிப்பை பார்க்க முடிகிறது. இதன் முழு தாக்கம் இன்னும் தெளிவாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரான்சில் புதிய கோவிட் மாறுபாடு கண்டறியப்பட்டு தற்காலிகமாக அதற்கு `IHU` என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.