NeoCov வைரஸ் ஆபத்தானதா? உலக சுகாதாரத்துறை சொல்வது என்ன?
புதிய வைரஸான NeoCov ஆபத்தானதா என்பதை குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முடிவிற்கு வந்தபாடில்லை. இந்நிலையில் சீன விஞ்ஞானிகள் கொரோனா குடும்பத்தில் இருந்து புதிய வகை 'NeoCov' வைரஸை கண்டறிந்துள்ளனர்.
இந்த வைரஸ் வவ்வால்களிடம் இருந்து மனிதனுக்கு பரவுவதாக கூறப்படுகின்றது. மனிதர்களுக்கு ஒரு மரபணு மாற்றம் ஏற்பட்டாலும் இந்த வைரஸ் தாக்கக்கூடும். அது மட்டும் இல்லாமல் இவ்வகை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரில் 3 பேரில் ஒருவர் உயிரிழக்கக் கூடும் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து 'NeoCov' வைரஸ் ஆபத்தானதா என்பது குறித்து உலக சுகாதாரத்துறை கூறியதாவது, தென்னாப்பிரிக்காவில் வாழும் வவ்வால்களிடம் இருந்து 'NeoCov' வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸால் மனிதர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். மனிதர்களிடம் ஏற்படும் 75% தொற்று நோய்களுக்கு விலங்குகள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன.
கொரோனா வைரஸ் எப்போதுமே விலங்குகளில் இருந்து தான் மனிதனுக்கு பரவுகிறது. ஆய்வுகளின் அடிப்படையில் 'NeoCov', Covid 19 வைரஸ் போலவே மனித உடலில் ஊடுருவ கூடியது. இந்த வைரஸ் இன்னும் ஒருமுறை உருமாறினால் கூட அது மனிதர்களைத் தாக்கும் திறன் பெற்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.