கொரோனா பாதித்தவர்களை ஒமிக்ரான் தாக்குமா? உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறித்து உலக சுகாதாரத்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே பல நாடுகளின் நம்பிக்கையாக செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் திகதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் கண்டறியப்பட்டது.
இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாக ஒமிக்ரான் வகை வைரசால் உலக மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் குறித்து உலக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனாவின் ஒமிக்ரான் மாறுபாடு பற்றிய ஆரம்ப கால ஆராய்ச்சியில் இந்த மாறுபாட்டில் மறுதொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கக்கூடும்.
அதாவது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக மீண்டும் எளிதில் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக முக்கிய சுழற்சி வடிவமான டெல்டாவிற்கு எதிரானவை கடுமையான நோய் மற்றும் இறப்பு விகிதத்தை குறைப்பதில் முக்கியமானவை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் எதிலும் இந்தளவு மாறுபாடுகள் இருந்ததில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.