தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு Omicron பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்! WHO கடும் எச்சரிக்கை
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் Omicron பெரும் ஆபத்தில் உள்ளதாக உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி படைத்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவை தொடர்ந்து புதிய வகை வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இது கொரோனாவில் இருந்து உருமாறியதால் Omicron என்று உலக சுகாதாரத்துறை பெயர் சூட்டியது. தற்போது உலக நாடுகளில் Omicron அதி பயங்கரமாக பரவி வருகின்றது.
இந்த ஆபத்தான வைரஸில் இருந்து தப்பிக்க ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் உலக சுகாதாரத்துறையின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தடுப்பூசியின் அவசியத்தை குறித்து தெரிவித்துள்ளார்.
அதாவது, டெல்டாவை விட Omicron வைரஸால் ஏற்படும் அபாயம் குறைவு. இருப்பினும் ஆபத்தானது. எனவே இந்த வைரஸை சுதந்திரமாக பரவ விட்டால் புதிய அலையை ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
இதில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம். ஆனால் ஆப்பிரிக்கா நாட்டில் இதுவரை 85 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் 2021 ஆகும் போது ஒவ்வொரு நாடுகளின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களும் டிசம்பரில் 40 வீதமானவர்களும், 2022 நடுப்பகுதியில் 70 வீதமானவர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பது Tedros நிறுவனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனால் கோவிட்- 19 நோயினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் ஆபத்தான நிலையை தவிர்க்க தடுப்பூசி செலுத்திக்கொள்வதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.