ஒமிக்ரான் வீரியம் குறித்து WHO வெளியிட்ட முக்கிய தகவல்
ஒமிக்ரான் மாறுபாட்டின் விரீயம் குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு, தற்போது பல்வேறு உலக நாடுகளில் பரவி, மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க தூண்டியுள்ளது.
ஒமிக்ரான் தீவிரமாக பரவினாலும், அதன் வீரியம் குறைவாக தான் இருக்கிறது என ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியானது.
எனினும், ஒமிக்ரானை கவலைக்குரிய மாறுபாடாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், முந்தைய மாறுபாடுகளை விட ஒமிக்ரான் லேசான அறிகுறிகளையே ஏற்படுத்துகிறது என்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் நிகழ்வு மேலாளர் Abdi Mahamud தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் மாறுபாடு உடலின் மேல் பகுதியை பாதிக்கிறது மற்றும் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று அதிகமான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இருப்பினும், ஒமிக்ரானின் அதிக பரவுதல் தன்மையால், எதிர்வரும் வாரங்களுக்குள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் என்றும், தடுப்பூசி போடப்படாத நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் Abdi Mahamud கூறினார்.
ஆய்வுகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், ஒமிக்ரானுக்கென பிரத்யே தடுப்பூசி வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியாது, ஆனால் அந்த முடிவில் உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை என்றும், தனியாரிடம் மட்டும் விட்டுவிடக் கூடாது என Abdi Mahamud வலியுறுத்தியுள்ளார்.