இவர்கள் மட்டும் தடுப்பூசி போடக்கூடாது..! வெளியான முக்கிய தகவல்
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது என்பது குறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மக்களிடையே தடுப்பூசி மீதான அச்சத்தை ஏற்படுத்தியது.
எனினும், தடுப்பூசிக்கும் விவேக் மரணமடைந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என மருத்துவமனை தரப்பிலும், நிபுணர்களும் விளக்கமளித்தனர்.
அதேபோல் மக்களிடையே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என தடுப்பூசி போட்டு அதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. கொரோனாவை ஒழிக்கும் முக்கிய ஆயுதமாக கருத்தப்படும் தடுப்பூசியை தற்போது தமிழக மக்கள் நம்பி போட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பது குறித்து ராஜீவ் காந்த மருத்துவமனை டாக்டர் தேரணிராஜன் கூறியதாவது, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் தடுப்பூசி போடுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தனர்.
சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில், அதில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் தடுப்பூசி போட வேண்டாம் என தெரிவித்துள்ளோம். என்னென்றால் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் கர்ப்பிணிப் பெண்கள் உட்படுத்தப்படவில்லை என விளக்கமளித்துள்ளார்.