யாரும் தப்பிக்க முடியாது! Omicron தொடர்பில் WHO வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை
புதிய வகை Omicron வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் எந்த உலக நாடுகளும் நோய் தொற்றில் இருந்து தப்பிக்க முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட Omicron மாறுபாடு காரணமாக உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. டெல்டாவை விட Omicron வைரஸ் வேகமாக பரவும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.
இதனிடையே உலக நாடுகளில் Omicron அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் அரசு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, வேறு முன்னெச்சரிக்கைகளை எடுக்காமல் திட்டமிடப்பட்ட கொண்டாட்டங்களுக்கு முன்னோக்கி செல்வதற்கான டிக்கெட்டாக பூஸ்டர் தடுப்பூசிகளை பார்க்க முடியாது.
கோவிட் தொற்று நோயில் இருந்து எந்த ஒரு நாடும் தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். தடுப்பூசி குறித்து பேசிய அவர் எல்லா நாடுகளும் கூடிய விரைவில் 40% இலக்கை அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.