கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும்? உலக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்
கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உலக சுகாதாரத்துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்து ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை முடிவுக்கு வந்தபாடில்லை. அதற்குள் கொரோனாவில் இருந்து புதிதாக உருமாறிய Omicron உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.
இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பில் உலக சுகாதாரத்துறை சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது, எச்.ஐ.வி, மலேரியா மற்றும் காசநோய் ஆகியவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட கொரோனா காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.
2022இல் நாம் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும். 2022 ஆம் ஆண்டு அனைத்து நாடுகளும் எதிர்கால பேரழிவை தடுப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும் முதலீடு செய்யும் ஆண்டாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.