ஐரோப்பிய நாடுகளுக்கு WHO விடுத்துள்ள எச்சரிக்கை! 5 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என அதிர்ச்சி தகவல்
ஐரோப்பாவில் பிப்ரவரிக்குள் 5 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி கோடிக்கணக்கான மக்களின் உயிரை எடுத்தது. அதன் பின் இதைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிரித்தானியாவின் சமீப நாட்களாக கொரோனா பரவலின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதே வேகத்தில் தொற்று பரவல் நீடித்தால், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் (2022) இன்னும் 5 லட்சம் பேராவது உயிரிழக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.