ஒமைக்ரான் அபாய கட்டத்தை எட்டியுள்ளது! எச்சரிக்கும் உலகசுகாதார அமைப்பு
கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமைக்ரான் வைரஸின் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் பரவ துவங்கிய கொரோனா வைரஸ், அதன் பின் பல்வேறு விதங்களில் உருமாறி, ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என பரவி வந்தது.
இதில் டெல்டா வைரஸ் அதிக வீரியமிக்கது என்பதால், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான விளைவுகளை சந்தித்தனர்.
இதற்கிடையில், கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வந்ததால், ஓரளவிற்கு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
அமெரிக்கா ஐரோப்பா நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டம் காரணமாக, மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் செல்வதால், ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு, ஒமைக்ரான் பரவல் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. டெல்டா வைரசை விட ஒமைக்ரான் பரவல் விகிதம் பல்வேறு நாடுகளில் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது.