மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இன்னும் ஒருமாத காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனுடன் சரத்குமார்-ரவி பாபு ஆகியோர் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ஒரு மித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும், கமல்ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே, முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் என சரத்குமார் கூறினார்.
சரத்குமாரை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார், சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது என அறிவித்தார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான்தான், எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.