ரூ. 20 கோடி லொட்டரியை வென்றவர் யார்? எதிர்பார்ப்பில் தவிக்கும் கேரள மக்கள்
கேரளாவில் இன்று நடைபெற்ற பம்பர் லொட்டரி குலுக்கல் முடிவில் 20 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள லொட்டரி டிக்கெட்டை வாங்கியது யார் என்று தெரியாததால் கேரள மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
கேரளா லொட்டரி
கேரள மாநில அரசு சார்பில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் லொட்டரி சீட்டுகள் கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
முதல் பரிசு 20 கோடி என்பதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிக் குவித்தனர்.
50 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையானது.
இந்த லாட்டரிக்கான குலுக்கல் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த குலுக்களில், முதல் பரிசாக 20 கோடி ரூபாயை வென்ற லொட்டரி சீட்டு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எக்ஸ்சி 224091 என்ற எண் கொண்ட லொட்டரிக்கு ரூ. 20 கோடி பரிசு விழுந்துள்ளது.
யார் அவர்?
இந்த லொட்டரி சீட்டு பாலக்காட்டில் உள்ள வின்ஸ்டார் கோல்டன் ஏஜென்சிஸ் என்ற நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் துரைராஜ் தெரிவித்துள்ளார்.
35 ஆண்டுகளாக தங்கள் நிறுவனம் லொட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும், அதிகபட்சமாக தங்களது விற்பனையில் இதுவரை ரூ.10 லட்சம் மட்டுமே பரிசு விழுந்துள்ளதாகவும் துரைராஜ் தெரிவித்துள்ளார்.
ஆனால் முதல் முறையாக ரூ.20 கோடி பரிசு பணம் விழுந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த டிக்கெட்டை வாங்கியவர் யார் என்பது இதுவரை தெரியாததால், கேரள மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |