கூகிள் நிறுவனத்துடன் 7 ஆண்டுகள்... இன்று சொந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ 8617 கோடி
பல இந்திய தொழில்முனைவோர் உலகின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்ததன் பின்னர் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க முடிவு செய்தனர்.
Livspace நிறுவனம்
அப்படியான ஒருவர் Anuj Srivastava, இவர் Livspace நிறுவனத்தின் இணை நிறுவனர். அனுஜ் 2007 முதல் 2014 வரை ஏழு ஆண்டுகள் கூகிளில் மின் வணிகக் குழுவின் தயாரிப்பு சந்தைப்படுத்தல் உலகளாவிய தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
இதன் பிறகு, 2015 ஆம் ஆண்டு பெங்களூருவில் ராமகாந்த் சர்மாவுடன் இணைந்து Livspace நிறுவனத்தை தொடங்கினார். அனுஜ் தொழில்முனைவராக இருப்பது மட்டுமின்றி, பல வளரும் நிறுவனங்களுக்கு முதலீடும் செய்து வருகிறார்.
ஐஐடி கான்பூரில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்ததுடன், லண்டன் வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார். 1998 ஆம் ஆண்டு பெப்சிகோவில் அதன் மேலாண்மை தலைமைத்துவ திட்ட மேலாளராக அனுஜ் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2007ல் கூகிள் நிறுவனத்தில் இணைந்தார். 2015 முதல் 2025 பிப்ரவரி வரையில் Livspace நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட அனுஜ், அதன் பின்னர் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
1 பில்லியன் டொலர்
தற்போது ராமகாந்த் சர்மா தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுகிறார். கடந்த பல ஆண்டுகளில் பல முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்த்துள்ள Livspace நிறுவனம், 2022ல் சுமார் 180 மில்லியன் டொலர் முதலீடைப் பெற்றதன் பின்னர் unicorn அந்தஸ்தை எட்டியது.
அதன் பின்னர் Livspace நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 பில்லியன் டொலர் தொகையைக் கடந்தது. இன்றைய மதிப்பில் ரூ 8617 கோடி என்றே கூறப்படுகிறது. குடியிருப்புகளில் உள் அலங்காரங்கள் மற்றும் புதுப்பித்தல் சேவைகளை Livspace நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |