ரூ 25 கோடி மதிப்பிலான யுரேனியம் விற்பனையை தடாலடியாக முறியடித்த ஐரோப்பிய நாடு
ஜார்ஜியாவில் 3 மில்லியன் டொலருக்கு யுரேனியத்தை விற்பனை செய்ய முயன்றதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 ஆண்டுகள் வரை சிறை
இந்த யுரேனியமானது அணுகுண்டை தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தேசிய பாதுகாப்பு சேவை அச்சம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜார்ஜியா நாட்டவர் ஒருவருடன் துருக்கியை சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கதிரியக்க பொருட்களை சட்டவிரோதமாக வாங்குதல், வைத்திருத்தல் மற்றும் வெளியேற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த இருவரும் கருங்கடலில் உள்ள மேற்கு நகரமான படுமியில் கைது செய்யப்பட்டனர், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கையில், ஜார்ஜியா நாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக கதிரியக்கப் பொருளான யுரேனியத்தை வாங்கி சேமித்து வைத்தார் எனவும் குறிப்பிடப்பட்ட அணுசக்திப் பொருளை துருக்கிய நாட்டவர் ஒருவருக்கு 3 மில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ 25 கோடி) விற்க முயன்றார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் உரிய நேரத்தில் தலையிட்டு, விற்பனையை முறியடித்ததாகவும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த யுரேனியம் எங்கிருந்து வந்தது அல்லது எங்கே கொண்டுசெல்லப்படுகிறது என்பது தொடர்பிலான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
சோவியத் ரஷ்யாவின் உறுப்பு நாடான ஜார்ஜியாவில் சமீபத்திய தசாப்தங்களில் அணுசக்தி பொருட்களின் சட்டவிரோத வர்த்தகம் தொடர்பான பல கடுமையான சம்பவங்கள் நடந்துள்ளன. 2016ல் 203 மில்லியன் டொலர் மதிப்பிலான யுரேனியம் விற்பனை செய்ய முயன்ற விவகாரத்தில் 12 பேர்கள் கைதாகினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |