திமிங்கல வாந்தியை ஏன் கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்குகிறார்கள்?
திமிங்கலத்தின் வாந்தி விலைமதிக்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது.
Ambergris என அழைக்கப்படும் இது திமிங்கலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேறும் ஒரு வகையான திடக்கழிவு பொருளாகும்.
Ambergris எனப்படுவது இயற்கையாகவே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் . இது மெழுகுபோன்ற திரவமாகும்.
இந்த மெழுகானது மருத்துவ பொருள் தயாரிக்கவும், விலை உயர்ந்த வாசனை திரவங்களை தயாரிக்கவும் பயன்படுகிறது.
image - indiatimes
Ambergris பார்ப்பதற்கு பாறாங்கல் போன்று இது சாம்பல், ப்ரவுன் மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும்.
முதலில் துர்நாற்றம் வீசினாலும், நேரம் செல்ல செல்ல வாசனை திரவியம் போல் அதன் நறுமணம் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
Ambergris பால்வினை சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தரும் மருந்தாக விளங்குகிறது.
இருப்பினும் இது கிடைப்பது மிகவும் அரிதாம். அப்படி கிடைத்தால் அந்த நபருக்கு அதிர்ஷ்டம் கூறப்படுகின்றது.
மேலும் சர்வதேச சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை இருக்கலாம்னு சொல்லப்படுது.