என்னை ஏன் பார்க்கிறாய்? முறைக்கும் திமிங்கலம்: ஒரு சுவாரஸ்ய வீடியோ
தைவானிலுள்ள மீன் காட்சியகம் ஒன்றில், தன்னை வேடிக்கை பார்க்கும் பெண் ஒருவரை திமிங்கலம் ஒன்று முறைக்கும் சுவாரஸ்ய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தன் தோழியருடன் தைவானிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்த Huang Chunchun என்ற இளம்பெண், மீன் காட்சியகம் ஒன்றில் ஒரு பிரம்மாண்ட கண்ணாடித் தொட்டியிலிருந்த திமிங்கலம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.
திடீரென அவரை நெருங்கிய அந்த திமிங்கலம் அவரைப் பார்த்து முறைக்க ஆரம்பித்தது.
புரியாமல் சட்டென பின்வாங்கிய Chunchun மீண்டும் அந்த திமிங்கலத்தையே பார்க்க, அதுவும் மீண்டும் அவரை நெருங்கி முறைத்ததுடன், அவரை திட்டுவது போலவும் வாயைத் திறந்து சைகை காட்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் Chunchun அந்த திமிங்கலத்தை அருகில் சென்று பார்க்க, அதுவும் விடாமல் அவரை முறைப்பதை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
சுமார் ஒரு நிமிடம் இதேபோல் Chunchunஐ முறைத்த திமிங்கலம், பிறகு அங்கிருந்து புறப்பட்டு தொட்டியின் மறுபக்கத்துக்கே சென்றுவிட்டது.
அந்த வீடியோவைப் பார்த்தால், என்னை எதற்கு வேடிக்கை பார்க்கிறாய் என அந்த திமிங்கலம் Chunchunஇடம் சண்டை போடுவது போலவே உள்ளது.