இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆகஸ்ட் 15 ஆம் திகதியை தேர்வு செய்தது ஏன்? ஜப்பானுக்கு உள்ள தொடர்பு
இந்தியா வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி தனது 79வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகிறது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய சுதந்திர தினம்
இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முடிவெடுத்த பிரித்தானிய அரசு, அதற்கான அதிகார பரிமாற்றத்தை கவனித்து கொள்ள மவுண்ட் பேட்டேனை இந்திய வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரலாக 21 பிப்ரவரி 1947 அன்று நியமிக்கப்பட்டார்.
1948 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சுதந்திரம் வழங்கும் பணியை முடிக்குமாறு, அன்றைய பிரித்தானிய பிரதமர் கிளமென்ட் அட்லீ மற்றும் மன்னர் ஐந்தாம் சார்ஜ் அறிவுறுத்தினர்.
மார்ச் மாதத்தில் இந்தியா வந்த மவுண்ட் பேட்டேன் இங்கு பெரியளவிலான கலவரங்கள் நிலவுவதை கண்டு, விரைவில் சுதந்திரத்தை வழங்கும் முடிவுக்கு வந்தார்.
ஒருங்கிணைத்த இந்தியாவை ஆதரிக்குமாறு அவர் முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவை சந்தித்து பேசினார். ஆனால், ஜின்னா இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்குவதில் உறுதியாக இருந்தார்.
1948 ஆம் ஆண்டு வரை சுதந்திரத்தை தாமதப்படுத்தினால் பாரிய கலவரத்திற்கு வழிவகுக்கும் என கருதிய மவுண்ட் பேட்டேன், 15 ஆகஸ்ட் 1947 அன்று சுதந்திரம் வழங்க முடிவு செய்தார்.
அந்த திகதியை மவுண்ட் பேட்டன் தேர்வு செய்ததில் அவருக்கு தனிப்பட்ட காரணம் ஒன்று உள்ளது.
ஏன் ஆகஸ்ட் 15?
4 ஜூன் 1947 அன்று மவுண்ட் பேட்டன் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 300 பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட சந்திப்பில் சுதந்திர திகதியை அறிவித்தார்.
15 ஆகஸ்ட் 1947 என்பது இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த இரண்டாம் ஆண்டு தினம் ஆகும்.
அந்த போரில், தென் கிழக்கு ஆசிய கூட்டணியின் உச்ச தளபதியாக(SEAC) மவுண்ட் பேட்டன் பணியாற்றினார். பிரித்தானியர்களுக்கும், மவுண்ட் பேட்டனுக்கும் அந்த திகதி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
இதன் காரணமாகவே இந்த திகதியை தேர்வு செய்தார். இந்த சம்பவம் Larry colins மற்றும் Dominique lapierre எழுதிய Midnight of Freedom என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4 ஆம் திகதி, மவுண்ட் பேட்டனின் சுதந்திர மசோதாவிற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதன்படி, 1947 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக பணியாற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |