புற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியிருந்த இந்திய வம்சாவளி மருத்துவர் கொலைகாரனானது ஏன்?: மன்னிப்புக் கோரும் அவரது பெற்றோர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஒரு இந்திய வம்சாவளி மருத்துவர், அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவர் ஒருவரை சுட்டுக்கொன்றார்.
செவ்வாயன்று மாலை டெக்சாசிலுள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த குழந்தைகள் நல மருத்துவரான Dr. Bharat Kumar Narumanchi (43), மற்றொரு குழந்தைகள் நல மருத்துவரான Dr. Katherine Lindley Dodson (43) உட்பட ஐந்து மருத்துவமனை ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டார்.
பின்னர், அவர் பிடியிலிருந்த நான்கு பேர் தப்பிக்க, Bharat, Dr. Katherineஐ சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, இன்னும் சில வராங்களே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கூறிவிட்ட நிலையில், சென்ற வாரம் இதே மருத்துவமனைக்கு வந்த Bharat, தன்னார்வலராக பணியாற்ற கோரிய விண்ணப்பத்தை அந்த மருத்துவமனை நிராகரித்துள்ளது.
அதனால் ஏற்பட்ட ஏமாற்றமா, அல்லது புற்றுநோயால் வாழ்வு முடியப்போகிறதே என்ற வெறுப்பா, எது Bharatஇன் இந்த முடிவுக்கு காரணமாக இருந்தது என்பது தெரியவில்லை. கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று Bharatஇன் பெற்றோர் Dr. Katherine குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், Dr. Katherineஇன் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள அவர்கள், எதனால் தங்கள் மகன் இந்த முடிவை எடுத்தான் என்பது தங்களுக்குப் புரியவில்லை என்று கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட Dr. Katherineக்கு கணவரும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அதேபோல், Dr. Bharat Kumarக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


