குஷ்பு ஏன் பதவியை ராஜினாமா செய்தார்? அவரே கொடுத்த விளக்கம்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து நடிகை குஷ்பு திடீரென ராஜினாமா செய்ததற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை குஷ்புவுக்கு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகை குஷ்பு நேற்று, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
குஷ்பு விளக்கம்
பதவி விலகல் குறித்து நடிகை குஷ்பு பேசுகையில், "கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடக்கும் சில விடயங்களுக்கு கருத்து தெரிவிக்கவும், எதிர்வினையாற்றவும் முடியாதது போல உணர்ந்தேன்.
அதற்கு நான் இருந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தடங்கலாக இருப்பது போன்று எண்ணினேன். இதனால் தீவிரமாக யோசித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன்.
பின்னர், இதுகுறித்து முறைப்படி ஆணையத்தின் தலைவர் மற்றும் கட்சி மேலிடத்திடமும் வெளிப்படுத்திய பிறகே பதவி விலகல் கடிதத்தை கொடுத்தேன். நான் தீவிரமான அரசியலில் ஈடுபட முடியாமல் போனதற்கு இந்த பதவி ஒரு காரணமாகும்.
இனி என்னுடைய கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். என்னுடைய முடிவுக்கு கட்சி ரீதியாகவோ வெளியில் இருந்தோ எந்தவொரு அழுத்தமோ கொடுக்கப்படவில்லை. நான் தீவிர அரசியலில் ஈடுபட போவதால் திமுகவுக்கு பயம் வந்துள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |