டிரம்ப் உடனான சந்திப்பின் போது ரூ.2.2 கோடி பணம் கொடுத்த புடின்! ஏன் தெரியுமா?
டொனால்ட் டிரம்ப் உடனான புடினின் சந்திப்பின் போது அமெரிக்காவிற்கு ரூ 2.2 கோடி ரொக்கப்பணமாக ரஷ்யா கொடுத்துள்ளது.
டிரம்ப்-புடின் சந்திப்பு
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இருவரும் ஆகஸ்ட் 15ம் திகதி அலாஸ்காவில் சந்தித்துக் கொண்டனர்.
மூடிய அறையில் 3 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் இறுதியில் எந்தவொரு தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லை.
அமெரிக்காவிற்கு 2.2 கோடி கொடுத்த புடின்
இந்நிலையில் சமீபத்திய தகவல் படி, அலாஸ்கா சந்திப்பின் போது புடின் தன்னுடைய 3 ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் ரூ. 2.2 கோடி ரொக்கப்பணமாக அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் வழங்கிய தகவலில், ரஷ்யா பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வருவதால் அமெரிக்க வங்கிகளை பயன்படுத்த முடியாது.
இதன் காரணமாக ரஷ்யா தரப்பு, எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கப் பணமாக செலுத்த வேண்டி இருந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் எதையும் அமெரிக்கா விதிக்காது என்றும், ஏற்கனவே பல பொருளாதார தடைகளில் ரஷ்யா இருப்பதால் புதிய தடைகள் உடனடி பலனை தராது என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |