டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் எப்போதும் வெள்ளை உடை அணிந்தே விளையாடுவது ஏன்?
விம்பிள்டன் போட்டிகளில் விளையாடும் டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் எப்போதும் வெள்ளை நிற உடை அணிந்தே விளையாடுவதை பலரும் கவனித்திருக்கலாம். அதற்குக் காரணம் என்ன?
தங்கள் விருப்பத்துக்கு மாறாக உள்ளாடை அணிய எதிர்ப்பு
1877ஆம் ஆண்டு முதல், விம்பிள்டன் வீரர் வீராங்கனைகள் வெள்ளை நிற உடை அணிந்து விளையாட வற்புறுத்தப்பட்டுவருகிறார்கள், உள்ளாடைகள் உட்பட...
ஒரு கட்டத்தில், பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் சிலர் தங்கள் விருப்பத்துக்கு உள்ளாடைகள் அணிய அனுமதிக்கவேண்டும் என கோரி பிரச்சாரம் செய்யும் நிலை கூட ஏற்பட்டது.
ஏனென்றால், சில நேரங்களில் வேறு நிறங்களில் உள்ளாடைகள் அணிந்து வந்த வீராங்கனைகள், உடனடியாக வெளியே சென்று வெள்ளை நிற உள்ளாடை அணிந்து வர வற்புறுத்தப்பட, உள்ளாடை அணியாமலே விளையாடும் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
வெள்ளை ஆடைகளின் பின்னணி என்ன?
டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் வெள்ளை உடை அணிவது, விக்டோரியா யுகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு விதி ஆகும். வெள்ளை நிற ஆடைகள் குறைவான வியர்வையையே வெளியே காட்டுவதாக நம்பப்பட்டது.
அத்துடன், டென்னிஸ் பணக்காரர்களின் விளையாட்டு என கருதப்பட்டதால், விளையாட்டு வீரர்களும் தங்களையும் மேல் குடிமக்கள் என காட்டிக்கொள்ளும் வகையில் கம்பீரமான வகையில் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனால், அது உள்ளாடைகள் அணிவதைக் கட்டுப்படுத்துவது வரை செல்லவே, சில வீரர் வீராங்கனைகள் அந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். என்றாலும், 2023ஆம் ஆண்டுதான், உள்ளாடைகள் முதல் வெள்ளை நிறத்திலேயே அணிந்துவரவேண்டும் என்னும் விம்பிள்டன் விதி மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |