வெளிநாட்டுப் பணியாளர்கள் சுவிட்சர்லாந்துக்கு படையெடுப்பது ஏன்?
விலைவாசி அதிகம் என்று தெரிந்தும் வெளிநாட்டுப் பணியாளர்கள் சுவிட்சர்லாந்துக்கு படையெடுப்பது ஏன்?
சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன?
பெடரல் புள்ளியியல் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளிலிருந்து, 2021 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைவிட, 2022 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு வந்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 3.7 சதவிகிதம் அதிகரித்திருப்பது தெரிவந்துள்ளது.
காரணம் என்ன?
சுவிட்சர்லாந்தும், பெரிய சுவிஸ் நகரங்களான சூரிச் மற்றும் ஜெனீவாவும் உலகின் விலைவாசி அதிகம் உள்ள இடங்கள் என தெரிந்திருந்தும், சுவிஸ் பணி அனுமதி கோருவோரின் எண்ணிக்கை குறையவில்லை.அதற்கு என்ன காரணம்?
நல்ல ஊதியம்
ஐரோப்பாவிலேயே, ஏன் உலகிலேயே அதிக ஊதியம் வழங்கும் நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து ஆகும். அதாவது, அதிக விலைவாசி, வாடகை, காப்பீட்டு பிரீமியம் தொகை, எரிபொருள், உணவு போக்குவரத்து, உடைகள், வரிகள் என பெரும் செலவு இருந்தாலும், அவற்றிற்கான செலவுபோக, நல்ல ஒரு வாழ்க்கை வாழ்வதற்குப் போதுமான பணத்தை சேமிக்கமுடியும் என்கின்றன ஆய்வுகள்.
நல்ல பணிச்சூழல்
சுவிட்சர்லாந்து பணியளர்களுக்கு சாதகமான சட்டங்கள் கொண்ட ஒரு நாடாகும். பல நாடுகளை ஒப்பிடும்போது, உடல் நலம் பாதிக்கப்பட்டால் விடுப்பு முதலான பல சலுகைகள் வழங்கப்படுகின்றன என்பதால் சுவிட்சர்லாந்தில் பணி செய்ய பணியாளர்கள் விரும்புகிறார்கள்.
வாழ்க்கைத்தரம்
வாழ்க்கைத்தரத்தைப் பொருத்தவரை, பல நாடுகள் கொண்ட பட்டியலில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருப்பதைக் குறித்த பல கட்டுரைகளை நீங்கள் வாசிக்கமுடியும்.
2022 செப்டம்பரில், சுவிட்சர்லாந்து உலகிலேயே சிறந்த நாடு என US News & World Report என்னும் அமைப்பால் தரவரிசைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Photo by Claudio Schwarz on Unsplash