இஸ்ரேலிய அமைச்சர் பிரான்ஸிற்குள் நுழைய தடை: வீடியோவிற்கு வலுக்கும் கண்டனங்கள்
காசாவிற்கான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மனிதாபிமான உதவியாளர்களை அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக இஸ்ரேலிய அமைச்சர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான உதவியாளர்களை அவமானப்படுத்திய விவகாரம்
இஸ்ரேலிய போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவி பொருட்களை வழங்குவதற்காக கப்பலில் சென்ற மனிதாபிமான உதவியாளர்களை அவமானப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென் - கிவிர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில், காசாவிற்கான மனிதாபிமான உதவி பொருட்களை கொண்டு செல்லும் நபர்களை இஸ்ரேலிய படையினர் சிறைப்பிடித்து கைகள் கட்டப்பட்டு தரையில் மண்டியிட வைக்கப்பட்டு இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
அத்துடன் மண்டியிட வைக்கப்பட்டிருந்தவர்களை அமைச்சர் கையில் இஸ்ரேலிய கொடியுடன் சுற்றி வருவதும், அவர்களிடம் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர்களை நாங்கள் இப்படி தான் வரவேற்போம் என்று கிண்டல் செய்வதும் இடம் பெற்று இருந்தது.
இதற்கு உலகின் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

பிரான்ஸிற்குள் நுழைய தடை
இந்நிலையில் மனிதாபிமான உதவியாளர்களை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட இஸ்ரேலிய அமைச்சர் இடமார் பென் கிவிர் இனி பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை விதிப்பதாக பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நொயல் பரோட் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
À compter de ce jour, Itamar Ben-Gvir est interdit d'accès au territoire français.
— Jean-Noël Barrot (@jnbarrot) May 23, 2026
Cette décision fait suite à ses agissements inqualifiables à l'égard de citoyens français et européens passagers de la flottille Global Smud.
Nous désapprouvons la démarche de cette flottille…
அத்துடன் இஸ்ரேலிய அமைச்சர் பென் கிவிர் மீது மேலும் உரிய தடைகளை பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய அமைச்சர் பென் கிவிர் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளுக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனம் முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |