கூகுள் நிறுவன வேலைக்காக காரில் வாழும் ஊழியர்: சுவாரஸ்யமான பின்னணி கதை!
கூகுள் நிறுவனத்தில் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர் ஒருவர் தன்னுடைய காரில் வாழ்ந்து வந்துள்ளார்.
கூகுளில் கிடைத்த வேலை
2019ம் ஆண்டு கென்டோ மோரிடா என்ற நபர் கூகுளின் பே ஏரியா தலைமையத்தில் வேலை செய்யும் அருமையான வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த வேலைக்கான நேர்காணலின் போது அவர் தொழில் வாய்ப்புக்காக நிறுவனம் அமைந்துள்ள பகுதியில் குடும்ப உறவுகள் இருப்பதாக பொய் சொல்லி உள்ளார்.

ஆனால் உண்மையில் அவர் சான்டா பார்பராவில் கிட்டத்தட்ட 300 மைல்களுக்கு அப்பால் வசித்து வந்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் காலகட்டத்தில் கூகுளில் கிடைத்த வேலைவாய்ப்பை தவறவிட இந்த ஆபத்தான முடிவை கென்டோ மோரிடா எடுத்துள்ளார்.
காரில் வாழ்ந்த கென்டோ மோரிடா
சான்டா பார்பராவில் கென்டோ மோரிடா தங்கியிருந்த வீட்டின் ஒப்பந்தம் முடிய 4 மாதங்கள் மீதம் இருந்ததால், அவரால் இரண்டு இடங்களில் வாடகை கொடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவானது.
அதே சமயம் பே ஏரியாவில் புதிய இடத்தை கண்டுபிடிப்பதும், ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பின் சராசரி வாடகை மாதம் $3,600 என உச்சநிலையில் இருப்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இதையடுத்து 2005 வோல்வோ காரை மலிவு விலைக்கு வாங்கிய கென்டோ மோரிடா, தன்னுடைய தற்காலிக வசிப்பிடமாக காரை மாற்றிக் கொண்டார்.
கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளான இலவச உணவு, உடற்பயிற்சி கூடம், குளியலறைகள் மற்றும் துணி துவைக்கும் வசதி ஆகியவை இந்த முடிவை மேலும் ஆதரித்துள்ளன.
இறுதியில் கூகுள் நிறுவனத்தின் நியூயார்க் நகர அலுவலகத்திற்கு தன்னை மாற்றிக் கொள்ளும் கோரிக்கையையும் இப்போது முன்வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |