கூகுளில் ரூ.2.5 கோடி சம்பளம்! வேலையை ராஜினாமா 27 வயது இளைஞர்: ஏன் தெரியுமா?
உலகில் உள்ள தொழில்நுட்ப அறிஞர்கள் அனைவருக்கும் கூகுள் நிறுவனத்தில் வேலை புரிய வேண்டும் என்ற மிகப்பெரிய கனவு இருப்பது நிதர்சனம்.
அப்படி இருக்கையில், 27 வயதான மென்பொருள் பொறியாளர் ஜிம் டாங்(Jim Tang), நியூயார்க்கில் தனது $300,000 (ரூ.2.5 கோடி) ஆண்டு சம்பளம் மற்றும் பல்வேறு ஆடம்பர சலுகைகள் தரக்கூடிய கூகுள் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
கூகுள் வேலை ராஜினாமா
2021ம் ஆண்டு ஜிம் டாங் கூகுளில் அதிகமான சம்பளத்திற்கு தேர்வான போது பலரை போலவே அவரும் தன்னுடைய வாழ்நாள் லட்சியத்தை அடைந்து விட்டதாக எண்ணி மகிழ்ந்துள்ளார்.
ஆனால் சலுகைகள், கை நிறைய சம்பளம் என பல இருந்தும், ஓரிரு வருடங்களிலேயே ஜிம் டாங் கார்ப்பரேட் சூழ்நிலை தனக்கு ஏற்புடையதாக இல்லை என்றும், ஏதோ ஒரு குறை இருப்பதாகவும் உணர்ந்துள்ளார்.
தொடக்கத்தில் 40 வயதில் ஓய்வை பெற்று விட திட்டமிட்டு, $5மில்லியன் சேமிப்பு திட்டத்துடன் பணியை தொடர்ந்துள்ளார்.
ஆனால் நாளுக்கு நாள் மனச்சேர்வு அதிகமானதை அடுத்து மே 2025ல் தனது கூகுள் வேலையை ஜிம் டாங் ராஜினாமா செய்துள்ளார்.
வாழ்க்கைக்கான அர்த்தம் தேடிய பயணம்
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த போது சேமித்த பெரும் தொகை ஜிம் டாங்கிற்கு மிகப்பெரிய பொருளாதார பாதுகாப்பை வழங்கியுள்ளது.
வாழ்க்கையை புதிதாக திட்டமிட்ட ஜிம் டாங் டோக்கியோவிலிருந்து ஆசியா முழுவதும் பயணம் செய்ய தொடங்கியுள்ளார்.
இந்த பயணத்தில் தன்னை தொழில்முனைவோராகவும், டிஜிட்டல் தயாரிப்பாளராகவும் வெளிப்படுத்தி வருவதோடு, சமூக ஊடகங்களில் தன்னுடைய பயண அனுபவத்தையும் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் ஜிம் டாங் வெற்றி குறித்த தன்னுடைய பார்வையை வெளிப்படுத்தி இருந்தார், அதில் ஒரு காலத்தை வெற்றி என்பது வெளிப்புற சாதனைகளாக அளவிட்ட நிலையில், தற்போது வாழ்க்கையில் நிறைவாக உணர்வதே வெற்றி என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |