இந்த விடயம் நடிகை கௌதமிக்கு நடக்க அதிமுக தான் காரணம்.., சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை
பாஜவில் இருந்து விலகிய நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்த நிலையில் அண்ணாமலை சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இணைந்த கௌதமி
பாஜகவில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதற்கு, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் கௌதமி குற்றம் சாட்டினார்.
பின்னர், கடந்த ஓக்டோபர் மாதம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்ணாமலை பேசியது
நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் நேரத்தில் பலர் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைவார்கள். அது ஒன்றும் புதிதல்ல.
ராஜபாளையத்தில் தனக்கு சீட் கொடுக்கவில்லை என்று நடிகை கௌதமி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அவர் இப்போது அதிமுகவில் இணைந்துள்ளார். ஆனால், ராஜபாளையம் தொகுதியை அதிமுக கேட்டும், பாஜக கொடுக்கவில்லை என்பதை கெளதமியிடம் எப்படி என்னால் சொல்ல முடியும். சில விடயங்களை பொது வெளியில் பேச முடியாது. அவருக்கே படிப்படியாக தெரியவரும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |