திருநெல்வேலிக்காரர்களால் உதயமான உதயம் தியேட்டர்.., பின்னணியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் விரைவில் மூடப்படுகிறது என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உதயம் தியேட்டர் உருவான கதை
பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வந்து சென்னையில் துணிக்கடை, பாத்திரக்கடை ஆகியவை வைத்து தற்போது வளர்ச்சி அடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்தவகையில், திருநெல்வேலியில் உள்ள ஒரு குடும்பம் சென்னையில் வந்து உருவாக்கிய தியேட்டர் தான் உதயம் தியேட்டர்.
திருநெல்வேலியில் உள்ள உதயத்தூர் கிராமத்தில் இருந்து வந்த குடும்பம் சென்னையில் அசோக் பில்லர் அருகே நிலம் வாங்கி 1983 -ம் ஆண்டு தியேட்டர் ஒன்றை கட்டியது. பிறகு இந்த தியேட்டருக்கு தனது கிராமத்தின் நினைவாக உதயத்தூர் என்பதில் இருந்து உதயம் என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்த தியேட்டர், பரமசிவம் பிள்ளை மற்றும் அவரின் 5 சகோதரர்கள் என்று 6 பேர் சேர்ந்து உருவாக்கப்பட்டது ஆகும். பின்னர் தியேட்டர் வளர்ச்சியடைந்ததையடுத்து கூடுதல் ஸ்கிரீன் சேர்க்கப்பட்டு உதயம், சந்திரன், சூரியன், உதயம் மினி என்று மாற்றப்பட்டது.
அப்போது, சென்னையின் வெற்றிகரமான தியேட்டர்களின் ஒன்றாக இது மாறியது. இதனை தொடர்ந்து தியேட்டரின் ஷேர் 6 அண்ணன், தம்பிகளின் குடும்பத்தில் பிறந்த எல்லோருக்கும் பிரித்து அளிக்கப்பட்டது.
இதன் பிறகு, சரியாக பராமரிப்பு இல்லாததால் 2000 தொடக்கத்தில் தியேட்டர் பின்தங்கியது. இதனையடுத்து, 2009 -ம் ஆண்டு நிறுவனர் பரமசிவம் பிள்ளை மீண்டும் தியேட்டரை வாங்கினார்.
அவர் ரூ.80 கோடி கொடுத்து வாங்கிய தியேட்டரை 2013 -ம் ஆண்டு விற்க முடிவு செய்தார். ஆனால், அது விற்பனைக்கு வாங்க யாரும் இல்லை.
தியேட்டர் மூடப்படுகிறது
தற்போது, இந்த தியேட்டரில் பெரிதாக கூட்டமும் வரவில்லை. இதனால், தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இந்த இடத்தில் 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தியேட்டருக்கு அருகே தற்போது மால் கட்டப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |