1986 ஆசிய கோப்பையில் இந்தியா விலகியது ஏன்? புதிய அணிக்கு கிடைத்த சர்வதேச அறிமுகம்
1986 ஆசிய கோப்பையில் இந்தியா விலகியதன் மூலம், அணி ஒன்றுக்கு சர்வதேச கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தது.
ind vs Pak
2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கி, T20 வடிவத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது.
ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் எதிரி நாடுகளாக உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர், இரு நாடுகளின் உறவு மோசமடைந்தது.
இந்நிலையில், இன்று பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என இந்தியாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
"2012 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடன் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால், ஆசிய கோப்பை என்பது ஒலிம்பிக் போட்டி போல் பன்னாட்டு தொடர் என்பதால் அதில் கலந்து கொள்ள உள்ளோம்.
இதனை புறக்கணித்தால், எதிர்காலத்தில் இந்தியாவில் பன்னாட்டு போட்டிகளை நடத்துவதற்கு எதிர்மறையாக அமையும். மத்திய அரசின் அனுமதியுடனே இந்த போட்டியில் கலந்து கொள்கிறோம்" என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை புறக்கணித்த இந்தியா
ஆனால், ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரை புறக்கணித்த வரலாறு இந்திய கிரிக்கெட் அணிக்கு உள்ளது.
1984 ஆம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபுஅமீரகத்தில் நடைபெற்ற முதல் ஆசிய கோப்பையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் மட்டுமே கலந்து கொண்டது. இதில், சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.
அடுத்து, 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது ஆசிய கோப்பை போட்டியை இலங்கை நடத்தியது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக, இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிசிசிஐக்கு இந்திய அரசு அறிவுறுத்தியது.
இதன் காரணமாக, 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியை இந்திய அணி புறக்கணித்தது. இந்தியாவிற்கு பதிலாக விளையாடும் வங்கதேச அணி பெற்றது. அதற்கு முன்னர் வங்கதேச அணி ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கூட விளையாடியதில்லை.
1986 ஆசிய கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம், வங்கதேச அணி தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது.
இந்த தொடர், வங்கதேசத்தின் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வங்கதேசத்தின் முக்கிய விளையாட்டாக இருந்த கால்பந்தின் இடத்தை கிரிக்கெட் பிடித்தது.
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற 3வது ஆசிய கோப்பையை நடத்தும் வாய்ப்பை வங்கதேசம் பெற்றது. 4 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், திலீப் வெங்கர்சாகர் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |