ரஷ்யாவில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் இந்திய மென்பொறியாளர்: ஊதியம் எவ்வளவு தெரியுமா?
இந்திய பட்டதாரிகள் தற்போது ரஷ்யாவின் சாலையில் தூய்மைப் பணியாளர்களாக களமிறங்கியிருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது.
ரஷ்யாவில் தூய்மை பணியாளர்களாக களமிறங்கிய இந்தியர்கள்
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் 17 இந்தியர்கள் அடங்கிய குழு தற்போது சாலையில் தூய்மைப் பணியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வந்துள்ள இந்த குழுவினர் ரஷ்யாவில் அலுவலகங்களிலோ அல்லது ஆய்வகங்களிலோ வேலை பார்ப்பதற்காக வரவில்லை, மாறாக ரஷ்யாவின் உடல் உழைப்பில் செய்யப்படும் வேலைகளை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.
இந்த இந்திய பணியாளர்களின் வேலைகளை கோலோமியாஜ்ஸ்கோயே (Kolomyazhskoye) என்ற ரஷ்ய பராமரிப்பு நிறுவனம் பொறுப்பேற்று நடத்தி வருகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ரஷ்ய சாலைகளில் பணிபுரியும் இந்தியர்கள், இந்தியாவில் மென் பொறியாளராக, கட்டிடக் கலைஞராக, திருமண ஏற்பாட்டாளராக, சிறு வணிகர்களாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பெரும்பாலானோர் தற்காலிக பொருளாதார திட்டத்திற்காக சிறிது காலம் ரஷ்யாவில் தங்கி பணம் ஈட்டிய பிறகு இந்தியாவுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
19 முதல் 43 வயதுடையவர்கள் அடங்கிய குழுவில் உள்ள 26 வயதுடைய முகேஷ் என்பவர் இந்தியாவில் மென் பொறியாளராகவும், மைக்ரோசாப்ட்டின் செயற்கை நுண்ணறிவு, சாட்பாட்கள் போன்ற அதிநவீன துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களுக்கான ஊதியம்
இந்திய பணியாளர்களின் வேலைகளை நிர்வகிக்கும் கோலோமியாஜ்ஸ்கோயே (Kolomyazhskoye) நிறுவனமே, ஊழியர்களுக்கான சட்டப்பூர்வ ஆவணங்கள், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து தருகிறது.
அத்துடன் இவர்களுக்கு மாதம் 1,00,000 ரூபிள்(இந்திய ரூபாய் அடிப்படையில் 1.1 லட்சம்) ஊதியமாக வழங்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |