இதை செய்துவிட்டு இந்திமொழியை எதிர்ப்பது ஏன்? தமிழ்நாட்டை தாக்கிய பவன் கல்யாண்
படத்தை இந்தியில் டப் செய்துவிட்டு இந்திமொழியை எதிர்ப்பது ஏன் என்று தமிழ்நாட்டை தாக்கி பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை அமலில் உள்ளது. உத்தர பிரதேசம், பிஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இந்த கொள்கையை பின்பற்றுகின்றன.
இந்த மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மும்மொழி பின்பற்றப்படுகிறது. அவற்றில் ஆங்கிலமும், இந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன.
ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
பவன் கல்யாண் பேசியது
இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசுகையில், "இந்தியாவுக்கு தமிழ் உள்பட பல மொழிகள் தேவையாக உள்ளது. இரு மொழிகள் மட்டுமே போதாது.
நமது நாட்டின் மக்களிடையே அன்பையும், ஒற்றுமையையும் பேணுவதற்கு பன்முக தன்மை அடிப்படையில் பல மொழிகளை ஏற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சமஸ்கிருதத்தை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாடு அரசியல்வாதிகள் பணத்துக்காக தங்களுடைய திரைப்படங்களை இந்தியில் டப் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? என்று தான் புரியவில்லை.
பாலிவுட்டில் இருந்து பணம் மட்டும் வேண்டும் என்கிறார்கள். ஆனால், இந்தியை மட்டும் புறக்கணிக்கிறார்கள். இது எந்த மாதிரியான லாஜிக் என்று புரியவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |