ABC ஜூஸ் ஏன் தினமும் குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
ABC ஜூஸில் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளை கொண்ட ஒரு ஆரோக்கிய பானமாகும்.
இதில் A, B1, B2, B3, B6, B9 C , E, K , இரும்புச் சத்து, துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் , பாஸ்பரஸ் செலினியம் என பல சத்துக்களை அளிக்கிறது.
அதிலும் இதனை வீட்டில் தயார் செய்து தினமும் குடித்து வந்தால் உடலுக்கு பல பயன்களை அள்ளித்தருகின்றது.
அந்தவகையில் தற்போது இந்த ஜூஸை எப்படி தயாரிக்கலாம்? அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
ABC ஜூஸ் தயாரிப்பு முறை:
- ஆப்பிள் - 1
- பீட்ரூட் - 1(சிறியது)
- கேரட் - 2(மீடியம் சைஸ்)
செய்முறை
மேலே கூறியுள்ள இரண்டு காய் மற்றும் ஒரு பழத்தை நன்றாகக் கழுவி தோல் நீக்கவும். அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து ஜூஸ் ஆக்கி எடுத்துக்கொள்ளவும். இதனை அப்படியே பருகலாம்; விரும்பினால் எலுமிச்சை சாறு, புதினா கலந்து குடிக்கலாம். வடிகட்ட வேண்டிய தேவை இல்லை.
அவ்வளவுதான் ABC ஜூஸின் செய்முறை. இவ்வளவு எளிய முறையில் ஜூஸ் செய்தாலும் இதன் நன்மைகள் மிக அதிகம்.
நன்மைகள்
- இந்த ஜூஸ் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் சீராக இயங்குகின்றன.
- சருமத்தை பராமரிப்பிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் தொடர்ந்து குடித்து வர உங்கள் மேனி பளபளப்பை நீங்களே கண்கூட காண முடியும்.
-
இது டீடாக்ஸ் பானமாகவும் இருப்பதால் கொழுப்பு சேர விடாமல் உடல் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை பராமரிப்பிலும் சிறப்பாக பங்காற்றுகிறது.
-
இரத்த ஓட்டம் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம்.