ஆபரேஷன் ரைசிங் லயன்; ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - என்ன காரணம்?

Israel Iran Iran-Israel War
By Karthikraja Jun 13, 2025 03:43 PM GMT
Report

ஈரான் தனது ராணுவ வலிமைய உயர்த்தும் நோக்கில், அணுஆயுத தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது என்ற ஒப்பந்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

ஆபரேஷன் ரைசிங் லயன்

இந்த நிலையில், இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன்(operation rising lion) என்ற பெயரில், ஈரான் மீது திடீர் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன்; ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - என்ன காரணம்? | Why Israel Attack Iran In Operation Rising Lion 

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் எதிரொலி! இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் எதிரொலி! இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு

மத்திய கிழக்கு பகுதியில், ஈரான் அணு ஆயுத வலிமை பெற்ற நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில், இஸ்ரேல் ஈரான் மீது இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

200 விமானங்களை ஏவி, 100 க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் அணு விஞ்ஞானிகள் பலி

ஆபரேஷன் ரைசிங் லயன்; ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - என்ன காரணம்? | Why Israel Attack Iran In Operation Rising Lion

மேலும், இந்த தாக்குதலில் ஈரானின் துணை இராணுவப் புரட்சிகரப் படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் உயர் மட்ட அணு விஞ்ஞானிகளான முகமது மெஹ்தி டெஹ்ரான்சி மற்றும் ஃபெரேடூன் அப்பாசி ஆகியோரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆபரேஷன் ரைசிங் லயன்; ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - என்ன காரணம்? | Why Israel Attack Iran In Operation Rising Lion

இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரானும் இதற்கு பதிலடியாக 100 ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது. இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த தாக்குதலை முறியடித்து வருகிறது.  

ஆபரேஷன் ரைசிங் லயன்; ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - என்ன காரணம்? | Why Israel Attack Iran In Operation Rising Lion

ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன.

ஏற்கனேவே இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் உடன் போர் நடத்தி வரும் நிலையில், ஈரான் மீது தற்போது தாக்குதலை தொடங்கி மத்திய கிழக்கில் மற்றுமொரு போர் முனையை இஸ்ரேல் திறந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US