மேடையில் கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: பின்னணி
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேடையேறி கோபமாக பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்
சில ஊடகங்கள் ’கோபப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்’ என்ற தலைப்பில் அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளன.

உண்மையில் என்ன நடந்தது என்றால், ஆப்பிரிக்க நாடான கென்யாவிலுள்ள நைரோபி பல்கலையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.
முதலீட்டாளர்கள், இளம் தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறை நிபுணர்களுக்கான அந்த நிகழ்ச்சியில், மேடையில் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருக்க, பார்வையாளர்கள் பலர் தங்களுக்குள் சத்தமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிலையில், அவர் அதை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் எழுந்து மேடைக்குச் சென்ற மேக்ரான், மைக்கை வாங்கி, மக்களே, நான் வருந்துகிறேன், நாம் நாகரீகத்தைக் குறித்தெல்லாம் பேசுகிறோம். ஆனால், மேடையில் பேச்சாளர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருக்கும்போது, இப்படி சத்தம் எழுப்புவது சரியல்ல.
இது முழுமையாக மரியாதையற்ற நடக்கையாகும். யாருக்காவது வேறு ஏதாவது பேசவேண்டுமானால், வெளியே போய் பேசுங்கள், இங்கே இருக்கவேண்டுமென்றால், அவர்கள் பேசுவதைக் கேளுங்கள் என மேக்ரான் கூற, அவரைப்போலவே ஒத்த கருத்து கொண்டிருந்த மற்றவர்கள் கரவொலி எழுப்பி அவர் கூறுவதை ஆமோதித்தார்கள்.
அந்த காட்சிகளை இங்கு வெளியாகியுள்ள காணொளியில் காணலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |