முல்லைத்தீவு தமிழ் நீதிபதி நாட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு: துரைராசா ரவிகரன் நேர்காணல்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தன்னுடைய உயிருக்கு ஆபத்து என கூறி உயிரை கையில் பிடித்து கொண்டு இலங்கையில் இருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிருக்கு பயந்து இலங்கை நாட்டை விட்டு வெளியேறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஐபிசி தமிழ் நேயர்களுக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில், நீதிபதியை எந்த அளவுக்கு அச்சுறுத்த முடியுமோ அல்லது எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு நீதிபதிக்கே அச்சுறுத்தல் கொடுக்கும் போது இலங்கையில் சட்டம் என்று ஒன்று எங்குள்ளது என்ற கேள்வி எழுவதாக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரத்தில் 2018ம் ஆண்டில் அங்கிருந்த ஆதிசிவன் ஐய்யனாரின் சூலம் மற்றும் அடையாளங்கள் எங்களிடம் இருந்தது, ஆனால் தற்போது அவை எங்களிடம் இல்லை.
தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் விகாரத்தை படிப்படியாக அங்கு கட்டி எழுப்பி விட்டார். இங்கு ஏற்பட்ட தவறுகளை துணிந்து நீதிமன்றம் சுட்டிக்காட்டி கட்டளைகளை வழங்கியது.
இது போன்ற பல முக்கிய தகவல்களை உள்ளடக்கிய வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனின் சிறப்பு நேர்காணலின் முழு வீடியோ தொகுப்பு இந்த பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |