நன்றி சொல்வதால் பல கோடிகளை இழக்கும் ChatGPT - எப்படி தெரியுமா?
செயற்கை நுண்ணறிவு துறை நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இதில் Open AI நிறுவனத்தின் ChatGPT ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ChatGPT
சாதாரண சந்தேகங்களுக்கு பதில் அளிப்பது தொடங்கி, ஐடி ஊழியர்களுக்கு கோடிங் எழுதி தருவது, படங்களை உருவாக்குவது வரை பல்வேறு செயல்பாடுகளை ChatGPT செய்கிறது.
இதனால் சாட்ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு உலகின் மிகவும் அதிகம் பதிவிறக்கப்பட்ட செயலியாக ChatGPT உருவெடுத்துள்ளது.
2025 மார்ச் மாதத்தில் மட்டுமே 46 மில்லியன் புதிய பதிவிறக்கங்களை பெற்றுள்ளது.
கூடுதல் செலவு
இந்நிலையில், பயனர்கள் ChatGPT உடன் உரையாடும் போது பயன்படுத்தும் Thank you, Please போன்ற வார்த்தைகளால் பல கோடிகள் செலவாகுவதாக அதன் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
பயனர்கள் ChatGPT உடன் உரையாடும் போது, அது ஒரு உணர்வற்ற செயற்கை நுண்ணறிவு என்பதை மறந்து, மனிதர்களுடன் பேசுவது போல், சரளமாக Please, Thank you போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
tens of millions of dollars well spent--you never know
— Sam Altman (@sama) April 16, 2025
ஏன் செலவு?
நாம் ChatGPT உடன் உரையாற்றும் போது, நாம் அனுப்பும் கேள்விகளை டோக்கனாக மாற்றியே அது செயல்படுத்தும். 4 எழுத்துகளை ஒரு டோக்கனாக கணக்கிடும்.
ஆய்வின் படி, 71% அமெரிக்கர்கள் ChatGPT உடனான உரையாடலில் Thank you, Please போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
ChatGPTயிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு தோராயமாக 2.9Wh மின்சாரம் செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. இது கூகிள் தேடலில் கேட்கப்படுவதற்கு, செலவாகும் மின்சார நுகர்வை விட 10 மடங்கு அதிகம்.
கோடிக்கணக்கான பயனர்கள் இது போன்ற தேவையற்ற வார்த்தைகளை அதிக அளவில் பயன்படுத்துவதால், கற்பனைக்கு எட்டாத வகையிலான செலவு ChatGPT க்கு ஏற்படுகிறது.
ChatGPT 2025 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில், மாதம் ஒன்றிற்கு சுமார் 415 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.3500 கோடி) வருமானம் ஈட்டியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |