ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய டிராவிட் - என்ன காரணம்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட்
2012, 2013 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், 2014 மற்றும் 2015 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.
இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், அதன் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் 2024 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 4 வெற்றி மற்றும் 10 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது.
பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகல்
இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவார் என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
Official Statement pic.twitter.com/qyHYVLVewz
— Rajasthan Royals (@rajasthanroyals) August 30, 2025
ஏற்கனவே அந்த அணியின் அணித்தலைவரான சஞ்சு சாம்சன் அணியில் இருந்து தன்னை விடுவிக்க கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ராகுல் டிராவிட்டும் விலக உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அணி நிர்வாகம் அணியின் கட்டமைப்பை மறுஆய்வு செய்த பின்னர், டிராவிட்டிற்கு மற்றொரு பொறுப்பை வழங்க முன்வந்ததாகவும், இதனை தொடர்ந்தே டிராவிட் விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், டிராவிட் பதவி விலகியதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |