அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளாத ஒரே தலைவர்: காரணம் இதுதான்
உலக பிரபலங்கள் முதல், நாட்டின் பிரதமர் வரை கலந்துகொண்ட ஆனந்த் அம்பானி திருமணத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர் மட்டும் கலந்துகொள்ளவில்லை.
அம்பானி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொள்ளாத தலைவர்
இந்திய பிரதமர் மோடி முதல் எதிரணியில் இருக்கும் சில கட்சித் தலைவர்கள் வரை ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்துகொண்டது அனைவரும் அறிந்ததே.
ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மட்டும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.
உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரும் ஆனந்த் அம்பானி வீட்டுத் திருமணத்தில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ராகுல் காந்தியோ, ஹத்ராஸ், அஹமதாபாத், அசாம் மற்றும் மணிப்பூரில் பல்வேறு துயர சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தார்.
While all the political leaders attended the Ambani family wedding, Rahul Gandhi was at a restaurant ordering pizza.#AnantwedsRadhika #AnantRadhika pic.twitter.com/QSPNG9oC68
— Satyam Patel | 𝕏... (@SatyamInsights) July 13, 2024
மற்ற அரசியல்வாதிகள் அம்பானி வீட்டில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், எளிய உணவகம் ஒன்றில் ராகுல் காந்தி உணவருந்த அமர்ந்திருப்பதைக் காட்டும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அம்பானி வீட்டுத் திருமணத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை?
ஆனந்த் அம்பானியின் தந்தையான முகேஷ் அம்பானி, ராகுல் காந்தியின் தாயாகிய சோனியா காந்தியின் வீட்டுக்குச் சென்று அவரை தன் மகன் திருமணத்துக்கு அழைத்ததற்காக, புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் சோனியா காந்தி.
ஆக, ராகுல் காந்தி மட்டுமல்ல, அவரது தாயாகிய சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி என யாருமே அம்பானி வீட்டுத் திருமணத்தில் பங்கேற்கவில்லை.
ராகுல் காந்தியின் இந்த முடிவுக்கு சில தரப்பினர் பாராட்டும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றை வகிக்கும் சந்தன் யாதவ், ஏற்கனவே, இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான அம்பானிக்கும் அதானிக்கும் ஆதரவாக ஆளுங்கட்சி செயல்பட்டுவருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், அம்பானி மற்றும் அதானி இருவரும் தேர்தலின்போது அரசியல்வாதிகளையும் ஊடகங்களையும் பணம் கொடுத்து கட்டுப்படுத்திவருவதாக ராகுல் காந்தியின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆக, அதுதான் ராகுல் காந்தியின் நிலைப்பாடு. அப்படியிருக்கும்போது, பொதுவாழ்க்கையில் அம்பானி குடும்பத்தை குற்றம் சாட்டிவிட்டு, அவரது வீட்டு திருமணத்துக்கு சென்றால், அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகிவிடும்.
காந்தி குடும்பத்தைப் பொறுத்தவரை, அவர்கள் பொதுமக்கள் நலனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளார்கள். ஆகவேதான் அவர்கள் அம்பானி வீட்டுத் திருமணத்துக்குச் செல்லவில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் சந்தன் யாதவ். அத்துடன், நேரு, காந்தி குடும்பத்தில் யாருடைய திருமணமும் ஆடம்பரமாக நடக்கவில்லை, அதை அவர்கள் விரும்பவும் இல்லை என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |