காலையில் பல அலாரங்கள் வைத்து எழும்புவரா நீங்கள்? நிபுணர்கள் எச்சரிக்கை!
காலையில் அடுத்தடுத்து பல அலாரங்களை வைத்து எழும்புவது உடலுக்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
நிபுணர்கள் எச்சரிக்கை
நீங்கள் காலையில் பல அலாரங்களை அடுத்தடுத்து வைத்து எழும்பும் பழக்கம் கொண்டவர் என்றால், அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல என்றும், கவனக்குறைவு, மனநல பாதிப்பு போன்ற பிரச்சனை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சில நிமிடங்கள் கூடுதல் தூக்கம் என்ற எண்ணத்தில் பலமுறை அலாரத்தை ஒத்திவைப்பது உங்கள் பழக்கமாக இருக்கலாம், ஆனால் இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியவில்லை.
நம் உடல் பல்வேறு தூக்க நிலைகளைக் கடந்து செல்கிறது, அதில் REM (Rapid Eye Movement) தூக்கம் என்பது மிக முக்கியமானது. இது அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
ஆனால் பல அலாரங்களை வைப்பதன் மூலம் உங்கள் தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு, தூக்கமும் குறைந்துவிடும்.
பாதிப்புகள்
பல முறை எழுந்து மீண்டும் தூங்குவது தூக்கச் சோர்வுக்கு வழிவகுக்கும்.
மேலும் இதனால் பகலில் கவனம் குறைதல், மனநிலை பாதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படும்.
அலாரம் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் உடலில் அழுத்தம் ஏற்பட்டு, கார்டிசோல் அளவு அதிகரிக்கும். நீண்ட கால அழுத்தம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தரமான தூக்கத்தையும் ஆரோக்கியமான தூக்க பழக்கத்தையும் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |