சரணடைந்தவர்கள் ஏன் தப்பிக்க வேண்டும்? என்கவுண்டர் குறித்து அண்ணாமலை சந்தேகம்
தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நடந்த என்கவுண்டர் குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேரை கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் தப்பிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் என்கவுண்டர் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலை சந்தேகம்
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "அவசரமாக என்கவுண்டர் என்ற பெயரில் ஒரு மனிதரின் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன?
காவல்நிலையத்தில் சரணடைந்தவர்கள் ஏன் தப்பிக்க வேண்டும்? காணாமல் போன ஒருவரை சுற்றி வளைத்து என்கவுன்ட்டர் செய்ததைத்தான் இதுவரை பார்த்துள்ளோம்.
ஆனால், சரண்டர் ஆன ஒருவரை என்கவுண்டர் செய்ததை முதல்முறையாக பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல், குற்றவாளிக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது?
அதிகாலையில் விசாரணைக்கு செல்லவேண்டிய காரணம் என்ன? தமிழக அரசு இந்த வழக்கை முறையாக விசாரிக்கிறதா?" என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |